சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100 பேரின் கட்சி பதவி பறிப்பு

 
eps

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏவுமான சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய கிளை நிர்வாகிகள் என சுமார் 100க்கும் மேற்பட்டோரை கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கண்ணியத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில், அழைத்துப் பேசினால் சந்திக்க தயார் என சிவிஎஸ் அறிவித்திருந்த நிலையில், இ.பி.எஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.