மெரினா - கோவளம் வரை கடற்கரை சீரமைப்பு - ரூ.100 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு..

 
marina


சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்கரையை மறுசீரமைத்து புத்தாக்கம் செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடற்கரையின் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த வசதி செய்வதும் மேம்பாட்டு திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த சட்ட பேரவையில் ஏப்ரல் மாதம் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுசூழல் சார்நிலை மாற்றம் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கி.மீ. நீள கடற்கரை பகுதியில் ரூ.100 கோடியில் மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்க பணிகள் மேற்கொள்வதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழக அரசு -  நிதி ஒதுக்கீடு

இந்த அறிவிப்பை செயல்படுத்தும்விதமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தினருடைய உறுப்பினர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை எண்ணூர் முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதியை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாப்பதற்கும் மேலும் இந்த கடற்கரை பொறுத்தவரையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் இடமாக அமைந்துள்ளது.

Marina

மேலும் 20 கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் வந்துசெல்வதால் கடலரிப்பு மற்றும் மண் குவியல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதால் இதனை மேம்படுத்துவதற்கு திட்டம் வகுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். அதனை பரிசீலனை செய்யப்பட்டதற்கு பின்பாக தமிழக அரசு ரூ.100 மதிப்பீட்டில் மறுசீரமைப்பு மேற்கொள்ளவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.