சென்னையில் வருகிறது புதிய மாற்றம்...100 பேருந்து நிறுத்தங்களை மாற்ற முடிவு!

 
Chennai Traffic

சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. 

சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இதன் காரணமாக அவ்வபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு மற்றும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள சிக்னல்கள், மேம்பாலங்களின் அருகேயுள்ள பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும், மாநகரப் பேருந்துகள் நெரிசலில் தவிர்க்கவும் பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.