மின்சார வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

 
tn assembly

தமிழகத்தில் மின்சார  வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

மின்சார வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் 4 சக்கர வாகனங்களுக்கு 50% வரி சலுகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார  வாகனங்களுக்கும்  100% விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-க்கு இணங்க மின்சார  வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகமும் கேட்டுக்கொண்டது.

மின்சார வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 1 முதல் ( 01.01.2023)  முதல்  2026ம் ஆண்டு ( 31.12.2025) வரை  அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 100% வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவுக்கு நிதித் துறையின் ஒப்புதல் தேவையில்லை எனவும்,  தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்புச் சட்டம், 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட  அதிகாரங்களைப் பயன்படுத்தி அனைத்து மின்சார  வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் வகையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.