10 மணி வரை பீர் விற்பனை… 10 மணிக்கு மேல கொலை… அதிர வைத்த ஊழியர்கள்!

 

10 மணி வரை பீர் விற்பனை… 10 மணிக்கு மேல கொலை… அதிர வைத்த ஊழியர்கள்!

‘மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்று எல்லா மதுபான பாட்டில்களிலும் எழுதப்படுகிறது. மதுபான கடைகளின் பெயர் பலகைகளில் சிறிய எழுத்துக்களில் எழுதி வைக்கிறோம். இருக்கிற கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று ஜெயலலிதா அறிவித்ததை அம்மா ஆட்சி நடத்தும் எடப்பாடியும், ஓபிஎஸ்ஸூம் மறந்தே போனார்கள் போல.

‘மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்று எல்லா மதுபான பாட்டில்களிலும் எழுதப்படுகிறது. மதுபான கடைகளின் பெயர் பலகைகளில் சிறிய எழுத்துக்களில் எழுதி வைக்கிறோம். இருக்கிற கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று ஜெயலலிதா அறிவித்ததை அம்மா ஆட்சி நடத்தும் எடப்பாடியும், ஓபிஎஸ்ஸூம் மறந்தே போனார்கள் போல. 10 மணியோடு மூடப்படுகிற டாஸ்மாக் கடைகளில், 10 மணிக்கு மேல் கள்ள வியாபாரத்தில் கத்தை கத்தையாக வியாபாரம் செய்து பணத்தை அள்ளி வருகிறார்கள். திருடர்களையும், குற்றவாளிகளையும் பிடிக்க அம்மா வாகனங்களில் ரோந்து வரும் காவலர்களின் கண்களில் இந்த டாஸ்மாக் கள்ள வியாபாரம் படாமலே இருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

tasmac

அது போல நேற்று நள்ளிரவில், பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தில் இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் கனஜோராக நடந்துக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் ஆனந்த் என இருவரும் வந்திருக்கிறார்கள். வழக்கமாக வருபவர்கள் கொஞ்சம் தாமதமாக வந்ததால், வழக்கமான விலைக்கே பீர் பாட்டில்களைக் கேட்டிருக்கிறார்கள். 10.05 க்கே பாட்டிலுக்கு 50 ரூபாய் அதிகம் வைத்து விற்பவர்கள், 10.30 மணிக்கு எப்படி வழக்கமான விலைக்கு தருவார்கள். வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் கொண்டு சென்றது.

beer bottle

ஆத்திரத்தில் பார் ஊழியர்கள் பீர் பாட்டிலால் இருவரையும் கொன்று குவித்தார்கள். பணம் பத்தும் செய்யும் என்று பார்மூலா படி கொலையும் செய்ய வைத்தது. வழக்கம் போலவே எல்லாம் முடிந்ததும் சாவகாசமாக வந்த போலீசார், இறந்து போன இருவரின் உடலையும் உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பார் ஊழியர்களைத் தேடி வருகிறார்களாம்.