ரயிலில் பட்டா கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறை.. மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..

 
ரயிலில் பட்டா கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறை.. மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..

ரயிலில் பட்டால் கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மின்சார ரயில்களில் சாகத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

ரயிலில் பட்டா கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறை.. மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள், படியில் தொங்கியபடியும் , ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி தொங்கிக்கொண்டே  பயணம் செய்வது போன்ற சாகசங்கள் செய்வது தொடர்கதையாகி வருகிறது.  இதுபோன்று மாணவர்கள் செய்யும் அட்டூழியங்கள் மற்றவர்களுக்கு இடையூராக இருப்பது ஒருபுறமிருக்க, அது மாணவர்களின் உயிருக்கே ஆபாத்தாக அமைந்துவிடுகிறது. இந்நிலையில் மின்சார ரயில்களில் அட்டூழியம் செய்யும் மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  நேற்று மின்சார ரயிலில் தொங்கியபடி தனியார் கல்லூரி மாணவர்கள்  பயணம் செய்தனர்.  அப்படி  சென்னை - திருத்தணி மின்சார ரயிலில் அட்டூழியம் செய்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ரயிலில் பட்டா கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறை.. மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..

மேலும், ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 6 பேர் ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல்  பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் ஒர்ருவரையும்  நேற்று போலீஸார் கைது செய்தனர்.  கத்தி வைத்திருந்த அந்த மாணவன் காவல்துறையினரை பார்த்ததும்  தப்பி ஓடிய நிலையில், இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இதனையடுத்து அரிவாள், பட்டாகத்தியுடன் ரயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால் இந்திய  ரயில்வே சட்டப்பிரிவு 153ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,  விஷம செயல்களில் ஈடுபட கூடாது எனவும் மாணவர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது.