டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் உயிரிழப்பு
Nov 3, 2026, 21:08 IST1793720308827
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்த 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அருகே திருமழிசை ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் 30 -க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் குமார், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

