கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ்

 
assembly

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் | Tamil News India  approval to give diwali bonus to central government employees

இதுதொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ பணிபுரியும்‌. ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம்‌ (Bonus) மற்றும்‌ கருணைத்‌ தொகை 2023-2024-இல்‌ வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.  போனஸ்‌ சட்டத்தின்‌ கீழ்‌ வரும்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப்‌ போலவே அவர்களுடைய சம்பளத்தில்‌ 10 சதவிதம்‌ போனஸ்‌ (போனஸ்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.  

போனஸ்‌ சட்டத்தின்‌ கீழ்‌ வராத, தலைமைச்‌ சங்கங்கள்‌ மற்றும்‌ மத்திய சங்கங்களின்‌ பணியாளர்களுக்கு ரூ.3000/-ம்‌, தொடக்க சங்கங்களின்‌ பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம்‌ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத்‌ தொகையாக வழங்கவும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.  இதன்படி, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள தலைமை கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌, மத்திய கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ மற்றும்‌ தொடக்க கூட்டுறவு சங்கங்கள்‌. ஆகியவற்றில்‌ பணிபுரியும்‌. 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு இலட்சம்‌ போனஸ்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை வழங்கப்படவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.