சட்டம், ஒழுங்கு சீர்கேடு குற்றச்சாட்டு எதிரொலி- 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Mar 25, 2025, 17:15 IST1742903121000

நெல்லை சரகக டிஐஜி மற்றும் ராமநாதபுரம் சரக டிஐஜி உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி,
- சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் வி.பாஸ்கரன் வண்ணாரப்பேட்டை இணை ஆணையராக பணியிடமாற்றம்.
- ராமநாதபுரம் டிஐஜி அபிநவ் குமார், மதுரை டிஐஜியாக பணியிடமாற்றம்.
- காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையர் மேகலினா இடென் சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையராக பணியிடமாற்றம்
- திருநெல்வேலி டிஐஜி பா.மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- வண்ணாரப்பேட்டை இணை ஆணையர் ஆர்.சக்திவேல் உளவுத்துறை- பிரிவு -1 இணை ஆணையராக பணியிடமாற்றம்.
- மயிலாப்பூர் இணை ஆணையர் டி.என்.ஹரி கிரண் பிரசாத் காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையராக பணியிடமாற்றம்
- ஈரோடு எஸ்.பி. ஜி.ஜவகர், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பியாக பணியிடமாற்றம்.
- தமிழ்நாடு கமாண்டோ சிறப்புப் படை எஸ்.பி. வி.கார்த்திக், மயிலாப்பூர் இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- திருப்பூர் வடக்கு சரக சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் ஏ.சுஜாதா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
- இதேபோல் திருநெல்வேலி ஆணையர் சந்தோஷ் ஹதிமானிக்கு திருநெல்வேலி டிஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.