"10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு!" – ஏழுமலையான் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய வழிகாட்டுதல்கள்!
திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகை அரங்கில் நேற்று நடைபெற்ற அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி கூறியதாவது:
திருமலையில் பிரம்மோற்சவத்துக்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் வழியே ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். டிச.20 முதல் 29-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும்.இதில் சாமானிய பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசித்துள்ளனர். அதேபோன்று, இந்த ஆண்டும் முதல் 3 நாட்கள் ஆன்லைனில் சர்வ தரிசன டோக்கன்கள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.
அடுத்த 7 நாட்கள் வெறும் சர்வ தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும். டிச.25-ம் தேதி வெள்ளியன்று மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். அப்போது கூட சர்வ தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு வெங்கைய்ய சவுத்ரி கூறினார்.

