உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் ரூ.1 லட்சத்தை ஆட்டையை போட்ட மர்மநபர் - போலீசார் தேடுதல் வேட்டை!

 
ttn

உதயநிதி ஸ்டாலின்  நிர்வாகிகளுக்கு அளிக்க இருந்த பரிசுத்தொகை ஒரு லட்சத்தை மர்மநபர் திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

tn

நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக சேப்பாக்கம் தொகுதி வட்ட செயலாளர் வெங்கடேசன் தனது பாக்கெட்டில் ஒரு லட்சம் ரூபாயை வைத்திருந்தார். கூட்ட நெரிசலில் திடீரென பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளது.  அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது தொப்பி அணிந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெங்கடேசன் அருகில் நீண்ட நேரமாக நின்றிருந்துள்ளார். 

tn

அத்துடன் உதயநிதி ஸ்டாலின் புறப்படும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு லட்சம் ரூபாயை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.  இதுகுறித்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.