சவுதி அரேபியா விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: 8 பேர் மருத்துவமனைகளில் அனுமதி!

 
Q

சவுதி அரேபியாவின் முக்கிய நகரமான தம்மாமில், கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தைக் குறிவைத்து நேற்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.

இந்த தாக்குதல் குறித்து சவுதி சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலைய வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து அதிகாரிகள் முழு வீச்சில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.