சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 பாரம்பரிய இடங்கள்!

 

சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 பாரம்பரிய இடங்கள்!

சென்னையில் பல பாரம்பரியமான கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் உள்ளன. நீங்கள் சென்னையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ரசிக்க விரும்பினால், கட்டாயம் இந்த கட்டிடங்களின் கட்டிடக்கலையை வரலாற்று பின்னணியில் ரசித்துப் பார்க்கலாம்.

சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 பாரம்பரிய இடங்கள்!

சென்னையில் பல பாரம்பரியமான கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் உள்ளன. நீங்கள் சென்னையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ரசிக்க விரும்பினால், கட்டாயம் இந்த கட்டிடங்களின் கட்டிடக்கலையை வரலாற்று பின்னணியில் ரசித்துப் பார்க்கலாம். இதுவரை இந்த இடங்களை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்றிருந்தால், அடுத்த முறை கடந்து செல்லும் போது, கொஞ்சம் நேரம் ஒதுக்கி உள்ளே சென்று இந்த கட்டிடங்களின் நேர்த்தியை ரசித்துப் பாருங்க! சென்னையின் பாரம்பரியமான இடங்களை ரசிக்க உங்களை வரவேற்பதில் டாப் தமிழ் நியூஸ் மகிழ்ச்சி கொள்கிறது!

1. கன்னிமாரா நூலகமும், எழுப்பூர் அருங்காட்சியகமும்
சென்னை எழும்பூர் பகுதியில், சென்னை அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 16.25 ஏக்கர் பரப்பளவில், 1851ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமாக விளங்குகிறது சென்னை எழும்பூர் அருங்காட்சியகம். மொத்தம் 46 காட்சியகங்களாக பரந்து விரிந்திருக்கிறது.  புவியியல், தொல்பொருளியல், விலங்கியல், மானுடவியல், காட்சியல், தாவரவியல் மற்றும் சிற்பக்கலை போன்ற பல்வேறு வகையான பிரிவுகளில் காணலாம். அதே வளாகத்தில் இருக்கும் கன்னிமாரா பொது நூலகத்தின் தொகுப்புகள் வேறு நூலகங்களில் காணக் கிடைக்காதவை. நூற்றுக்கணக்கான பிரிவுகளில், லட்சக்கணக்கான நூல்கள் இருக்கின்றன. நாளிதழ், வார இதழ்கள், பருவ இதழ்கள், மாத இதழ்கள் என்று சத்தமில்லாமல் வாசகர்களுக்கும், போட்டி தேர்வு எழுதும்  மாணவர்களுக்கும் சேவை செய்து வரும் இடமாக திகழ்கிறது.

egmore museum

திறந்திருக்கும் நேரம் – காலை 9:30 மணி முதல் முதல் மாலை 5 வரை. வெள்ளிக்கிழமையும், தேசிய விடுமுறை நாட்களும் விடுமுறை
இலவச வழிகாட்டி சேவை காலை 11 மணி முதல் 3 மணி வரை உள்ளது.
அருகில் உள்ள ரயில் நிலையம்: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 500 மீ தொலைவு

2. சாந்தோம் பெசிலிக்கா தேவாலயம்
முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் செயின்ட் தாமஸ் கல்லறை மீது கட்டப்பட்டது. அதன் பின்னர் நியோ-கோதிக் பாணியில் 1893-ல் பிரிட்டிஷர்களால் மீண்டும் கட்டப்பட்டது, சான் தோம் பெசிலிக்கா யாத்ரீகர்களுக்கு உகந்த மத அனுபவத்தை அளிக்கிறது. பிற மதத்தவர்களும் கட்டிடக்கலையை ரசிக்கலாம். சாந்தோம் என்ற சொல்லிற்கு ‘புனித தோமா’ என்று பொருள். 
திறந்திருக்கும் நேரம் – 6 மணி முதல் 9 வரை
அருகிலுள்ள ரயில் நிலையம்: திருமயிலை ரயில் நிலையம் 1.4 கிமீ தொலைவு

george

3. கோட்டை செயின்ட் ஜார்ஜ்
இந்தியாவில், பிரித்தானியர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக, புனித ஜார்ஜ் கோட்டை கருதப்படுகிறது. ஆரம்ப காலங்களில் பிரிட்டிஷார் மதராஸ்(சென்னை) மகாணத்தை இந்த கட்டிடத்திலிருந்து தான் ஆட்சி புரிந்தார்கள். பல தலைவர்களையும், தலைமுறையையும் கண்ட இந்த கட்டிடம்  இன்று தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சட்டப் பேரவையாக செயல்படுகிறது.  பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் என்ற இரண்டு ஆங்கில அதிகாரிகளின் முயற்சியில் 1963ம் ஆண்டு, இந்த கோட்டையின் கட்டுமான பணி தொடங்கியது. புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23ம் தேதி கட்டிமுடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது. சென்னைக்கு சுற்றுலா வரும் அனைவரும் பார்க்க விருப்பப்படும் இடங்களுள் ஒன்றாக புனித ஜார்ஜ் கோட்டை இருக்கிறது.  இது 1644-யிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு ஆட்சியாளர்களை அமர்த்திய கட்டிடம் மற்றும் தமிழ்நாட்டில் மிக முக்கியமான கட்டிடங்களில் ஒன்று.
பார்வையாளர் அறிவுறுத்தல்கள்
திறந்திருக்கும் நேரம் – வெள்ளி மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர காலை 10 மணி முதல் மாலை 5 வரை
அருகிலுள்ள ரயில் நிலையம்: சென்னை கோட்டை 2 கிமீ தொலைவு

4. ரிப்பன் கட்டிடம்
சென்னை மாநகராட்சியின் தற்போதைய நிர்வாக கட்டிடமாக செயல்பட்டு வருகிறது. கோதிக், அயனிக் மற்றும் கொரிந்தியன் இணைப்பான நியோ-கிளாசிக்கல் பாணியில் அனைத்தும் வெள்ளை அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடம் இது. லோகநாத முதலியார் என்பவரால், அந்தக் காலத்திலேயே 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், 1909ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, 1913ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த ரிப்பன் பிரபுவின் பெயர் இக்கட்டிடத்திற்கு சூட்டப்பட்டது.  அருகிலுள்ள ரயில் நிலையம்: சென்னை சென்ட்ரல் 1 கிமீ தொலைவு
சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம்
இது இந்தியாவின் மிக முக்கியமான ரயில் நிலையமாகும். பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் புகழ்பெற்ற உதாரணமாக வீற்றிருக்கிறது. கட்டிக்கலைஞர் ஜார்ஜ் ஹார்டிங் அவர்களால் வடிவமைக்கப்பட்ட 144 ஆண்டு பழமையான கட்டிடம்.

5. சென்னை உயர் நீதிமன்றம்
உலகின், இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகம் கருதப்படுகிறது. இக்கட்டிடம், விக்டோரியா பேரரசியின் ஆட்சியில் நிறுவப்பட்டது. மேலும், 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892ல் என்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டி முடிக்கப்பட்டது.