‘வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துகள்’ : நடிகர் கமல் ஹாசன் ட்வீட்!

 

‘வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துகள்’ : நடிகர் கமல் ஹாசன் ட்வீட்!

ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (இன்று) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ttn

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.

தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.