"தீக்குளித்து இறந்த கண்ணையா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

tn

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் 250-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்துத் தள்ளும் பணி நேற்று நடைபெற்றது. ராஜிவ் ராய் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், பசுமைவழிச் சாலையையும், காமராஜர் சாலையையும் இணைக்கும் 40 அடி அகலம் கொண்ட பக்கிங்காம் - கால்வாயின் தெற்குக் கரையை ஆக்கிரமித்துள்ள சென்னை -28, ஆர்.ஏ. புரம், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டது. இதனடிப்படையில் வீடுகளை  இடிக்கும் பணி  நேற்று நடைபெற்றது. அப்போது இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கண்ணையா என்ற 60 வயது முதியவர் தீக்குளித்தார்.  இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

tn

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் என்பவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ₹10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மந்தவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள். அதே பகுதியில் அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மறுகுடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப்படும் என்றார்.