“மைக் கிடைத்தால் எதையும் பேசலாமா?”- நடிகர் கொட்டாச்சி விவகாரத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் காட்டம்

 
ச்

திரையுலகில் சமீபகாலமாக மேடைகளிலும், பேட்டிகளிலும் சக கலைஞர்களைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு, பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நடிகர் சூரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கொட்டாச்சி, அதன் விளைவாக எழுந்த எதிர்ப்புகளுக்குப் பின் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியிருந்தார். 

இந்த விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், “பலருக்குத் தங்களுக்கு என்று ஒரு மைக் கிடைத்தவுடன், தாங்கள் விரும்பியதையெல்லாம் பேசிவிடுகிறார்கள். பின்னர் அதற்காக ஏன் மன்னிப்பு கேட்கிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை நிச்சயம் கிடைக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே பேசும் போது கவனமாகப் பேசுங்கள். யாரைப் பற்றியோ அல்லது எதைப் பற்றியோ நேர்மறையாக சொல்வதற்கு உங்களிடம் எதுவும் இல்லை என்றால், அமைதியாக வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான்' என் வாழ்க்கை முறை” எனக் குறிப்பிட்டுள்ளார்.