ஸ்ரீகர் பிரசாத்துக்கு தென்னிந்திய படத்தொகுப்பாளர்கள் சங்கம் வாழ்த்து..!

 
1

இந்திய சினிமாவின் பிரபலமான எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். 40 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளார். தற்போது இவருக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலக திரைப்படத் துறையின் உயரிய அமைப்புகளில் ஒன்றான ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக தேர்வாகி உள்ளார். இதற்காக தென்னிந்திய எடிட்டர் சங்கம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஸ்ரீகர் பிரசாத் ஆகிய நாங்கள் உலக திரைப்படத் துறையின் உயரிய அமைப்புகளில் ஒன்றான ஓ அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (OSCAR) உறுப்பினராக தங்களை நியமித்ததற்காக தென்னித்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்கம் (SIFEA) சார்பில் இதயம் கனிந்த பாராட்டுகளையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

படத்தொகுப்புத் துறையில் தாங்கள் வெளிப்படுத்தி வரும் சிறப்பான திறமை அர்ப்பணிப்பு மற்றும் நீண்டகால பங்களிப்பிற்கான சர்வதேச அங்கீகாரமாக இந்த பெருமை அமைந்துள்ளது. தங்களது இந்த சாதனை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர்கள் சங்கத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். 


தங்களது இந்த மகத்தான சாதனையை நமது சங்கம் தங்கள்ள பெருமையுடன் பாராட்டுகிறது.