வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்..

 

வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்..

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கலைஞர் நினைவிடத்தில், கோபாலபுரத்தில், சி.ஐ.டி காலனியில்
கலைஞருக்குத் தமிழ் வணக்கம் செலுத்தி வந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்..

அவர் மேலும்,
ஜூன் 3
கலைஞர் பிறந்தநாள்

தமிழுக்கு
ஏடு திறந்தநாள்
தமிழர்க்குச்
சூடு பிறந்தநாள்

வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்..

பகுத்தறிவுக்குப்
பிள்ளை பிறந்தநாள்
பழைமை லோகம்
தள்ளிக் களைந்தநாள்

மேடை மொழிக்கு
மீசை முளைத்தநாள்
வெள்ளித் திரையில்
வீரம் விளைத்தநாள்

வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்..

வள்ளுவ அய்யனை
வையம் அறிந்தநாள்
வைரமுத்துவின்
ஆசான் பிறந்தநாள்

என்று குறிப்பிட்டிருக்கிறார்.