மனைவியின் பிரேத பரிசோதனை அறிக்கையால் கணவர் சிறையிலடைப்பு

மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகம் ஆடிய கணவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் நீதிக்கானாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. 42 வயதான இவரின் கணவர் குமார். தம்பதிக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார் .
மருத்துவமனை துப்புரவு தொழிலாளியான அனிதா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். அனிதாவுக்கு கணவருடன் சேர்ந்து அடிக்கடி அது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது.
கடந்த 13ஆம் தேதி இரவு வீட்டிலிருந்த அனிதா மது குடித்து இருக்கிறார். அவரது மகன் கார்த்திக் லேத் ஒர்க்ஷாப் வேலைக்கு சென்று இருக்கிறார் . இரவில் வெளியே சென்று இருந்த சின்னதுரை வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது அனிதாவுக்கும் சின்னதுரைக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
சின்னத்துரை பின்னர் இந்த கொலையை மறைக்க சேலையில் அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் செட்டப் செய்து இருக்கிறார். மறுநாள் காலையில் அனிதாவின் தம்பி முத்து என்பவர் வீட்டிற்கு வந்த போது, தூக்கில் சடலம் தொங்கியதால் போலீசுக்கு தகவல் சொல்ல, போலீசார் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதன் பின்னர்தான் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. முகத்தில் தாக்கி இருப்பதும் கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டு இருப்பதும், மூச்சுத்திணறச் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் சின்னத்துரை திடீரென்று மாயமானார். அவரை தேடி வந்த போலீசார் இன்று காலையில் சிங்காநல்லூரில் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அனிதாவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதை சொன்னதும், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.