புல்லூர் தடுப்பணையில் மூழ்கி 17 வயது சிறுவன் பலி

 
நீரில் மூழ்கி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே புல்லூர்  தடுப்பணையில் நண்பருடன் குளிக்கச் சென்ற (17 வயது) சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் தனுஷ் (வயது 17). இவர் கட்டிடக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இன்று இவரது நண்பர்கள் 4 பேர் தமிழக ஆந்திரா எல்லையில் புல்லூர் என்ற இடத்தில் பாலாற்று குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள  தடுப்பணைக்கு சென்றுள்ளனர்.

அங்கு நண்பர்களுடன் தண்ணீரில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்த போது தனுஷ் உட்பட இருவர் நீரில் மூழ்கி ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். நீரில் முழுகிய  இருவருக்கும் நீச்சல் தெரியாததால் அவர்களை மீட்க பகுதி மக்கள் போராடினர். அப்போது ஒருவரை மட்டுமே அப்பகுதி மக்கள், போராடி மீட்ட நிலையில் தனுஷ் (வயது 17) என்பவர் நீரில் மூழ்கி மாயமாகினார்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு குப்பம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தனுஷின் உடலை சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடி அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் நீரில் முழுகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.