நாளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகா பயணம்..!!

 
Q Q
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை கர்நாடகா வரும் சி.பி.ராதாகிருஷ்ணன் மைசூரு, மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமண மத வழிபாட்டு தலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு செய்கிறார். பின்னர், மைசூருவில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும், மண்டியா மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி கர்நாடகாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.