உமர் முகமது நபியின் இல்லம் தரைமட்டம்!
Nov 14, 2025, 14:05 IST1763109326145
டெல்லி செங்கோட்டை பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் முன் கடந்த 10ம் தேதி மாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி என்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் அமைந்துள்ள மருத்துவர் உமர் முகமது நபியின் வீட்டைப் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.


