"அடுத்த ஜேம்ஸ் பாண்ட் இவர்தான்!" – இணையத்தில் 67 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கும் நடிகர்!

 
1

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் (James Bond) கதாபாத்திரத்தின் அடுத்த 007 முகமாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 

டேனியல் கிரெய்க் விலகியதைத் தொடர்ந்து, அடுத்த படமான 'பாண்ட் 26' (Bond 26) திரைப்படத்திற்கான முன்னணி நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. பிரபல இயக்குநர் டெனிஸ் வில்லேனுவ் (Denis Villeneuve) இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கான இறுதி கட்ட ஸ்கிரீன் டெஸ்ட் (Screen Test) பணிகள் லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிரே ஸ்டுடியோஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.   


இந்த ரேஸில் ஹென்றி காவில், இட்ரிஸ் எல்பா, ஜேக்கப் எலோர்டி, ஆரோன் டெய்லர்-ஜான்சன் உள்பட பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது களத்தில் இரண்டு அல்லது மூன்று பெயர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிரபல நடிகர்களான கலம் டர்னர் (Callum Turner) மற்றும் ஜாக் லோடென் (Jack Lowden) ஆகியோருடன் ஜோஷ் ஓ'கானர் (Josh O'Connor) ஆகியோரும் இந்த இறுதிச் சுற்றில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கலம் டர்னர், ஜாக் லோடன், மற்றும் ஜோஷ் ஓ கானர் உள்ளிட்டோர் பரிசீலனை செய்யப்பட்டு ஸ்கிரீன் டெஸ்ட்டில் பங்கேற்றதாக தகவல் வெளியானது.அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் ஜாக் லோடன் மற்றும் ஜோஷ் ஓ கானர் ஆகியோரிடம் ஸ்க்ரீன் டெஸ்ட் செய்யப்பட்டது. ஆன்லைனில் நடந்த ஆய்வில் ஜாக் லோடன் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிக்க 67 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.தேர்வு பட்டியலில் அவர் முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஜாக் லோடன் தேர்வாகும் பட்சத்தில் , கேனரிக்கு பிறகு ஸ்காட்லாந்தை சேர்ந்த நடிகர் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த பெருமை இவருக்கு கிடைக்கும். எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.யார் இவர்ஸ்காட்லாந்தை சேர்ந்த பெற்றோருக்கு 1990ல் பிறந்த இவர், பல மேடை நாடகங்களில், ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருந்தார். இதில் ஒரு சில படங்களுக்கு பல விருதுகளை பெற்றார். பல நாடகங்களில் அவர் உளவாளியாக நடித்து உள்ளார்.