சிவப்பு நிறமாக மாறிய தாமிரபரணி ஆறு – மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

 

சிவப்பு நிறமாக மாறிய தாமிரபரணி ஆறு – மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்று நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளதை தொடர்ந்து அதற்கு விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும், ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி ஆறு திகழ்கிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக இந்த ஆற்றின் நீர் சிவப்பு நிறமாக மாறி ஓடியது. இதுதொடர்பாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதி மக்கள் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

சிவப்பு நிறமாக மாறிய தாமிரபரணி ஆறு – மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பாபநாசம் அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி ஆற்று நீரை ஆய்வு செய்தனர். தற்போது ஆற்றில் நீர் அளவு குறைவாக இருப்பதால் சேறு சகதி காரணமாக இவ்வாறு ஆற்று நீர் சிவப்பு நிறமாக மாறியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒரு தனியார் தொண்டு நிறுவனம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த விஷயத்தில் அடுத்த 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.