தேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சி யாருடன் கூட்டணி?

 

தேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சி யாருடன் கூட்டணி?

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பில் முதல்வர் பழனிசாமியும், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் மு.க ஸ்டாலின், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் கமல்ஹாசனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில், திமுகவுடன் விடுதலை சிறுத்தைக் கட்சி, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன.

தேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சி யாருடன் கூட்டணி?

திமுகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் அனைத்தும் தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன. தற்போது கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘மனித நேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் நெல்லையில் 23ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.