தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

 

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது.

Image

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த சூழலில், படப்பிடிப்பு தாமதமாவதால் படம் ரிலீஸும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி- 65 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜயின் பிறந்தநாளையொட்டி இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துவரும் அவரது 65வது படத்திற்கு ‘பீஸ்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது