ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்! அரசாணை வெளியீடு

 

ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்! அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது எனவும் இதற்காக தனியாக சான்றிதழ் பெற தேவையில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்! அரசாணை வெளியீடு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. இடைநிலை ஆசிரியராக பணியில் சேர முதல் தாளிலும், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர 2ம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்ற விதி நடைமுறையில் இருந்தது.

இந்நிலையில் தகுதித் தேர்வுச் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்ததது. இதனிடையே, தமிழகத்திலும் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோருக்கு பணி நியமனம் செய்யப்படவில்லை. அவர்கள் தங்கள் சான்றிதழ்களை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் எனவும் இதற்காக தனியாக சான்றிதழ் பெற தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012, 2013, 2014, 2017 மற்றும் 2019ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது