திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்!

 

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்!

கட்டுமான பணிகள் நடைபெறுவதால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், 17ம் தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியின் 4 மண்டலங்களிலும் ரூ.900 கோடி செலவில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. பாளையங்கோட்டை பேருந்து நிலையம், நேரு கலையரங்கம், ஜவஹர் மைதானம் உள்ளிட்ட இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலப்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகேயும் அபிவிருத்தி பணிகள் நடக்கிறது. இதனால் புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் நடைமேடை 4ல் இருந்து இயக்கப்பட்டு வந்த மதுரை, திருச்சி, சென்னை வழித்தடத்தில் செல்லக் கூடிய அனைத்து பேருந்துகளும் பணிகள் முடிவுறும் வரை 17.10.2020 முதல் தெற்குப் புற வழிச்சாலை ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் (சரவணா செல்வரத்னம் அருகில்) எதிரில் உள்ள காலி இடத்தில் இருந்து தற்காலிகமாக இயங்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்!