Home தமிழகம் சென்னை உட்பட 22 மாவட்டங்களில்... வெயில் சுட்டெரிக்கும்!

சென்னை உட்பட 22 மாவட்டங்களில்… வெயில் சுட்டெரிக்கும்!

தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அஞ்சும் அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கிறது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த போது திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.

சென்னை உட்பட 22 மாவட்டங்களில்... வெயில் சுட்டெரிக்கும்!
சென்னை உட்பட 22 மாவட்டங்களில்... வெயில் சுட்டெரிக்கும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் லேசான சாரல் மழையும் சில மாவட்டங்களில் கன மழையும் பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததன் படி பல இடங்களில் நல்ல மழை பெய்தது. ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

சென்னை உட்பட 22 மாவட்டங்களில்... வெயில் சுட்டெரிக்கும்!

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 20 ஆம் தேதி முதல் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 22 மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ஏப்ரல் 22ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சென்னை உட்பட 22 மாவட்டங்களில்... வெயில் சுட்டெரிக்கும்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews