‘ஆளுங்கட்சியின் சதி’… தேர்தலில் கள்ள ஓட்டுகள் பதிவு!

 

‘ஆளுங்கட்சியின் சதி’… தேர்தலில் கள்ள ஓட்டுகள் பதிவு!

திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.பி துர்கா பிரசாத் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் காலமானார். இதனால், அந்த தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன் படி, திருப்பதி தொகுதியில் நேற்று இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

‘ஆளுங்கட்சியின் சதி’… தேர்தலில் கள்ள ஓட்டுகள் பதிவு!

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 79 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் 64.29% வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் களம் கண்டன. இந்த நிலையில், திருப்பதி இடைத் தேர்தலில் கள்ள ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதாவது, வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான நபர்களை வரவழைத்து ஆளுங்கட்சி கள்ள ஓட்டுகள் போட வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

‘ஆளுங்கட்சியின் சதி’… தேர்தலில் கள்ள ஓட்டுகள் பதிவு!

இது குறித்து பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேர்தலின் போது தனியார் வாகனங்களை அனுமதித்தது ஏன்?. சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் வழிமறிக்கப்படவில்லை. ஆளுங்கட்சிக்கு காவல்துறை உடந்தையாக இருக்கிறது. எனவே திருப்பதி தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டி, திருப்பதி கோவிலுக்கு செல்லவே ஏராளமான மக்கள் வருகை தந்ததாகவும் அந்த வாகனங்களை வழிமறித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.