கொரோனா லாக்டவுனால் கூலித் தொழிலாளியாக மாறிய தெலங்கானா ஆசிரியர்கள்

 

கொரோனா லாக்டவுனால் கூலித் தொழிலாளியாக மாறிய தெலங்கானா ஆசிரியர்கள்

தொற்று நோயான கொரோனா வைரஸ் நம் நாட்டில் பரவ தொடங்கியது முதல் சாமானிய மனிதர்கள் முதல் கோடீஸ்வரர் வரை பலரது வாழ்க்கையும் புரட்டி போட்டு விட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அமல்படுத்திய நாடு தழுவிய லாக்டவுனால் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர். வேலை இழந்ததால் பலரும் தங்களது படித்த படிப்புக்கு பொருத்தம் இல்லாத கூலி வேலைக்கும் செல்ல தொடங்கினர். தெலங்கானாவில் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழந்ததால் கூலி வேலைக்கு சென்று அன்றாட வாழக்கையை நகர்த்தி வருகின்றனர்.

கொரோனா லாக்டவுனால் கூலித் தொழிலாளியாக மாறிய தெலங்கானா ஆசிரியர்கள்

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் 32 வயதான பயிலி சத்யநாராயணா. கொரோனா வைரஸ் லாக்டவுனால் அந்த பள்ளி மூடப்பட்டது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் அந்த பள்ளி நிர்வாகம் 3ல் ஒரு பகுதி சம்பளத்தை மட்டுமே கொடுத்து, இதையும் நீண்ட நாட்களுக்கு கொடுக்க முடியாது என கையை விரித்து விட்டது. இதனையடுத்து சத்யநாராயணா தனது மனைவி மற்றும் 8 மாத கை குழந்தையுடன் நால்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு சென்றார். அங்கு மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.

கொரோனா லாக்டவுனால் கூலித் தொழிலாளியாக மாறிய தெலங்கானா ஆசிரியர்கள்

அந்த திட்டத்தின்கீழ், உள்ளூர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்து வந்தார். இதற்காக அவர் நாள் ஒன்றுக்கு ரூ.150 சம்பளம் பெற்றார். பின் அந்த பகுதியில் உள்ள காட்டன் ஆலைக்கு தினமும் ரூ.300 சம்பளத்தில் வேலைக்கு சென்று வருகிறார். இது தொடர்பாக சத்யநாராயணா கூறுகையில், ஆசிரியர் பணி சமூகத்தில் மரியாதைக்குரிய ஒரு உன்னதமான தொழிலாக இருந்தது. நான் எனது தகுதியை பற்றி சிந்திக்க தொடங்கினால் நான் பட்டினியால் இறந்து விடுவேன் என தெரிவித்தார். சத்யாநாராயணாவை போல் தெலங்கானாவில் மாஞ்சேரியல் மாவட்டத்தை சேர்ந்த இந்தி ஆசிரியரான ஜாகீர் அமகது ஷேக் என்பவரும் லாக்டவுனால் ஆசிரியர் வேலையை இழந்ததால் தனது பகுதியில் உள்ள கேஸ் சிலிண்டர் கம்பெனியில் சிலிண்டர் ஏற்றி இறக்கும் வேலையை செய்து வருகிறார். மேலும் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகளையும் செய்து வருகிறார்.