தெலங்கானா முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மனுக்கு 2.5 கிலோவில் தங்க சேலை வழங்கிய அமைச்சர்

தெலங்கானா முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மனுக்கு 2.5 கிலோவில் தங்க சேலை வழங்கிய அமைச்சர்

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மாநில அமைச்சர் ஒருவர் யெல்லாமா தேவிக்கு 2.5 கிலோ தங்க சேலையை வழங்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான கே. சந்திரசேகர் ராவை அங்குள்ள மக்கள் கடவுளின் அவதாரமாக பார்க்கின்றனர். 2014ம் ஆண்டில் ஒன்றுப்பட்ட ஆந்திராவிலிருந்து பிரிந்து தெலங்கானா தனி மாநிலமாக உருவானதில் இருந்து அம்மாநில முதல்வராக கே.சந்திரசேகர் ராவ் உள்ளார். கே.சந்திரசேகர் ராவ் நேற்று 67வது வயதில் அடியெடுத்து வைத்தார் அதாங்க அவருக்கு நேற்று பிறந்தநாள்.

தெலங்கானா முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மனுக்கு 2.5 கிலோவில் தங்க சேலை வழங்கிய அமைச்சர்
கே.சந்திரசேகர் ராவ்

பொதுவாக கே.சந்திரசேகர் ராவின் பிறந்தநாளை அந்த கட்சி தொண்டர்கள் கடும் விமர்சையாக கொண்டாடுவர். இந்த ஆண்டும் அவரது பிறந்தநாளை டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் சிறப்பாக கொண்டாடினர். குறிப்பாக அம்மாநில அமைச்சர் தலசனி சீனிவாஸ் யாதவ், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு யெல்லாமா தேவிக்கு (பெண் கடவுள்) 2.5 கிலோ எடையில் தங்க சேலையை காணிக்கையாக வழங்கியது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தெலங்கானா முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மனுக்கு 2.5 கிலோவில் தங்க சேலை வழங்கிய அமைச்சர்
அமைச்சர் காணிக்கையாக வழங்கிய தங்க சேலையில் அம்மன்

கே.சந்திரசேகர் ராவின் 67வது பிறந்தநாளை கொண்டாட நாள் முழுவதும் திட்டமிடப்பட்ட பல நிகழ்வுகளில் இதுவும் (தங்க சேலை காணிக்கை) ஒன்றாகும். மேலும் டி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.