நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவறினால் சட்டப்பேரவைக்கு இனி வரமாட்டோம்.. மிரட்டும் தேஜஸ்வி யாதவ்

நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவறினால் சட்டப்பேரவைக்கு இனி வரமாட்டோம்.. மிரட்டும் தேஜஸ்வி யாதவ்

பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டதற்கு முதல்வர் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் தற்போதைய அரசாங்கத்தின் பதவி காலம் முடியும் வரை சட்டப்பேரவை புறக்கணிப்போம் என்று தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை செய்துள்ளார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் அம்மாநில சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் அரசாங்கம் சிறப்பு ஆயுத போலீஸ் மசோதா 2021 தாக்கல் செய்து இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாநில சட்டப்பேரவையில் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவறினால் சட்டப்பேரவைக்கு இனி வரமாட்டோம்.. மிரட்டும் தேஜஸ்வி யாதவ்
இழுத்து செல்லப்பட்ட எம்.எல்.ஏ.

அன்று பீகார் சட்டப்பேரவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் அவையில் குழப்பத்தை ஏற்படுத்தினர். இதனையடுத்து பாதுகாவலர்கள் அவைக்குள் அழைக்கப்பட்டு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவறினால் சட்டப்பேரவைக்கு இனி வரமாட்டோம்.. மிரட்டும் தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார்

இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறுகையில், அரசாங்கள் மாறுகின்றன என்பதை நிதிஷ் குமார் ஜி தெரிந்து கொள்ள வேண்டும். சட்டப்பேரவைக்குள் எம்.எல்.ஏ.க்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தாக்கப்பட்டனர். நிதிஷ் குமார் இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தற்போதைய அரசாங்கத்தின் எஞ்சிய பதவி காலம் முழுமைக்கும் சட்டப்பேரவையை புறக்கணிப்போம். நிர்லாஜ் குமார் அனைத்து அவமானங்களையும் இழந்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.