பீகாரில் இப்போது குண்டர்கள் மட்டுமே அரசாங்கத்தை நடத்துகிறார்கள்… நிதிஷ் குமாரை தாக்கிய தேஜஸ்வி யாதவ்

பீகாரில் இப்போது குண்டர்கள் மட்டுமே அரசாங்கத்தை நடத்துகிறார்கள்… நிதிஷ் குமாரை தாக்கிய தேஜஸ்வி யாதவ்

பீகாரில் தற்போது குண்டர்கள் மட்டுமே அரசாங்கத்தை நடத்துகிறார்கள் என்று நிதிஷ குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்தார்.

பாட்னாவை சேர்ந்த இண்டிகோ விமான நிறுவனத்தின் மேலாளர் ரூபேஷ் கே சிங் கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். முதல்வர் நிதிஷ் குமாரின் இல்லத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில்தான் ரூபேஷ் கே சிங் கொலை செய்யப்பட்ட இடம் உள்ளது. இதனால் இந்த கொலை சம்பவம் பீகாரில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் இப்போது குண்டர்கள் மட்டுமே அரசாங்கத்தை நடத்துகிறார்கள்… நிதிஷ் குமாரை தாக்கிய தேஜஸ்வி யாதவ்
கொலை

இந்த கொலை சம்பவத்தை குறிப்பிட்டு, குற்றவாளிகள் இப்போது பீகாரில் அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் கட்டுப்பாட்டை மீறி விட்டன.

பீகாரில் இப்போது குண்டர்கள் மட்டுமே அரசாங்கத்தை நடத்துகிறார்கள்… நிதிஷ் குமாரை தாக்கிய தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார்

ஆனால் முதல்வர் நிதிஷ் குமார் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களுடன் கூட பேச விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடி எங்கே? மகாஜங்கிள்ராஜின் மகாராஜா என்ற தன்னை கூறிக்கொண்ட அவர் ஏன் பதிலளிக்கவில்லை? இப்போது குண்டர்கள் மட்டுமே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். நிதிஷ் குமார் அழுத்தம் காரணமாக முதல்வரானார். உள்துறையை திறம்படி நிர்வகிக்க முடியவில்லை என்றால் நிதிஷ் குமார் விலக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.