பீகாரில் நடக்கும் குற்றங்கள் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் பேச வேண்டும்.. தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்

பீகாரில் நடக்கும் குற்றங்கள் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் பேச வேண்டும்.. தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டங்களில் மாநிலத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து பேச வேண்டும் என தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தி நிறுவனத்துக்கு அளித் பேட்டியில் கூறியதாவது: அவர்கள் (பீகார் அரசு) அச்சத்தின் சூழலில் மக்களை வைத்திருக்க விரும்புகிறார்கள். தேசிய குற்ற பதிவு பணியகத்தன் புள்ளிவிவரத்தின்படி, பீகாரில் குற்ற விகிதம் 40 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கும் ஒரு பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. பீகாரில் ஒவ்வொரு 5 மணி நேரத்துக்கும் ஒரு கொலை நடைபெறுகிறது. இது குறித்து முதல்வர் நிதிஷ் குமார் பேச வேண்டும்.

பீகாரில் நடக்கும் குற்றங்கள் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் பேச வேண்டும்.. தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

முதல்வர் நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும். பீகார் இளைஞர்கள் மாநிலம். அவர்களிடம் நாம் உண்மையாக பேச வேண்டும். முதல்வர் நிதிஷ் குமார் கூட்டங்களில் உண்மை விஷயங்களை பேச வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதை நிதிஷ் குமார் சொல்ல வேண்டும்.

பீகாரில் நடக்கும் குற்றங்கள் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் பேச வேண்டும்.. தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
குற்றங்கள்

கொரோனா வைரஸ் மற்றும் வெள்ளம் நேரத்தில் அவர் ஏன் காணாமல் போனார் என்பதையும் அவர் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று ஆன்லைன் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசிய சில மணி நேரங்களில் தேஜஸ்வி யாதவ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு தெரிவித்து இருந்தார்.