பணம் கொடுக்காத பெற்றோர் -பிணமாக்கிய மகன் -நாலு பேர் பிணத்தோடு நாலு மாதம் வாழ்ந்தார்

 

பணம் கொடுக்காத பெற்றோர் -பிணமாக்கிய மகன் -நாலு பேர் பிணத்தோடு நாலு மாதம் வாழ்ந்தார்


தன்னுடைய குடும்பத்தினர் நால்வரை கொன்று அவர்களின் பிணத்தோடு நாலு மாதம் வாழ்ந்த நபரை போலீஸ் கைது செய்தது

பணம் கொடுக்காத பெற்றோர் -பிணமாக்கிய மகன் -நாலு பேர் பிணத்தோடு நாலு மாதம் வாழ்ந்தார்


மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் கலியாசக் காவல் நிலைய பகுதியில் உள்ள குருடோலா கிராமத்தில் ஆசிப் முகமது என்ற 19 வயது நபர் தனது தந்தை ஜவாத் அலி (50), தாய் ஈரா பிபி (45), சகோதரி அரிஃபா கதுன் (17) மற்றும் பாட்டி அலெக்ஜன் பிபி (75) ஆகியோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த குடும்பத்தில் ஏற்பட்ட பண தகராறில் அந்த டீனேஜ் வாலிபர் அந்த நால்வரையும் கொலை செய்ய முடிவெடுத்தார் .
அதன் படி அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தார் .
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த ஆசிப் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்தார் .அதை வாங்கி குடித்த அவர்கள் அனைவரும் அன்று இரவே இறந்து போனார்கள் அதன் பிறகு அவர்கள் நால்வரையும் அந்த ஆசிப் வீட்டின் தோட்டத்தில் பள்ளம் வெட்டி புதைத்தார் .பின்னர் அவரிடமிருந்து ஒரு சகோதரர் மட்டும் தப்பித்து தலைமறைவாகிவிட்டார் .அதன் பிறகு ஆசிப் அக்கம் பக்கத்தினரிடம் தன்னுடைய உறவினர்கள் அனைவரும் வெளியூர் சென்று விட்டதாக பொய் சொல்லி விட்டு நாலு மாதம் அவர்களின் பிணத்துடன் தனியே வசித்தார்
இந்த கொலை விஷயம் அந்த ஆசிப்பின் சகோதரர் அங்கிருந்து தப்பி வந்து, நான்கு மாதங்களுக்கு பிறகு போலீசில் புகார் கூறிய போது வெளிச்சத்துக்கு வந்தது .அதன் பிறகு போலீசார் வழக்கு பதிந்து அந்த ஆசிப்பை தேடி வந்தனர் .இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அவரை கைது செய்தனர் ,