ரியல் மீ இன் புது அறிமுகம்! வயர்லெஸ் ஏர் பட்ஸ் இயர்போன்
ரியல் மி போன்கள் மார்க்கெட்டுகளில் நன்கு விற்பனையாகிவரும் நிலையில் இப்போது இந்நிறுவனம் தனது புதிய அறிமுகமான வயர்லெஸ் ஏர் பட்ஸ் இயர்போன்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த இயர்போன்கள், நாளை(17-12-19) இந்திய நேரப்படி 2மணிக்கு விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

சீனா நிறுவனமான ரியல் மி வயர்லெஸ் ஏர் பட்ஸ் அறிமுகம் செய்யும் அதே வேளையில் தனது ரியல் மீ X2 போனையும் தந்து தலைநகரில் அறிமுகம் செய்கிறது. ரியல் மி தனது வெளியீட்டில் குறைந்தது 3 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்நிறுவனம், அதன் உண்மையான வயர்லெஸ் இயர்பட் IST பிந்தைய வெளியீட்டுக்கு பிற்பகல் 2மணிக்கு விற்பனைக்கு வருமென்று உறுதிப்படுத்தியுள்ளது.
இவை,ஆன்லைனில் பிளிப்கார்ட் மற்றும் ரியல் மி டாட் காம்-ல் கிடைக்கும். இந்நிறுவனம், தனது வயர்லெஸ் இயர்பட் பற்றிய தகவல்களையும் இதன் நிறங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் அதன் அளவில்லாத கனெக்டிவிட்டி பற்றிய வீடியோவை அஃபிசியல் ட்விட்டர் பக்கத்தில், பதிவு செய்திருக்கிறது .
ரியல் மி ஏர் வயர்லெஸ் இயர்போன்ஸ் 5.0 ப்ளூடூத்துடனும் கனெக்ட் செய்யது கொள்ள முடியும்,மேலும் இதன் கேஸ் திறந்தவுடன் ஆட்டோமேட்டிக் கன்னெக்ட்விட்டியை உறுதி செய்து கொள்ளும். இதன் சிறப்பம்சங்கள் என்னவெனில், இந்த இயர்போன்களுடன் 12mm பாஸ் பூஸ்ட் டிரைவர் மற்றும் டச் கன்ட்ரோல்கலும் இருக்கும் இதன் விலையை பொருத்தவரை வெளியீட்டு நிகழ்வில் சரியான தொகை அறிவிக்கப்படும் ஆனால் சமீபத்திய பிலிப்கார்ட் பட்டியலில் ரியல் மீ பட்ஸின் விலை ரூ.4,999 என போடப்பட்டிருந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.