மூன்று ரியர் கேமராக்கள் கொண்ட ‘சோனி எக்ஸ்பீரியா எல்4’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

மூன்று ரியர் கேமராக்கள் கொண்ட ‘சோனி எக்ஸ்பீரியா எல்4’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

‘சோனி எக்ஸ்பீரியா எல்4’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ‘சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல ஜப்பான் நிறுவனமான சோனி, தனது ‘சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் மூன்று ரியர் கேமரா செட்டப் ஆகியவை இடம்பெற்றுள்ளன. எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் முதலில் விற்பனைக்கு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதன் விலை பற்றி சோனி நிறுவனம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.

சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக 6.2 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, டுயல் சிம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், மீடியாடெக் எம்.டி6762, 3ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, 13 எம்.பி பிரைமரி கேமரா, 8 எம்.பி செல்பி கேமரா, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-சி, 3580 எம்.ஏ.ஹெச். பேட்டரி, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், 3.5எம்.எம் ஹெட்போன் ஜாக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.