மனிதர்களைப் போலவே குட்டிக்கரணம் அடிக்கும் ரோபோ!
மனிதர்களைப் போலவே குட்டிக்கரணம் அடிக்கும் ரோபோ வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
மனிதர்களைப் போன்ற ரோபோவை தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், திரைப்படங்களில் மட்டுமே மனிதனைப் போன்ற ரோபோக்களைப் பார்த்துள்ளோம். ரோபோ மனிதர்கள் மனித இனத்துக்கே சவாலாக மாறிவிடலாம். அவர்களை அழிப்பது கடினம் என்று எச்சரிக்கையும் எழுந்தபடி உள்ளது.

இந்த நிலையில், ஓரளவுக்கு மனிதனைப் போல குட்டிக்கரணம் அடிக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ட்விட்டர் மிகவும் சுறுசுறுப்பான ரோபோ என்று இந்த ரோபோ குட்டிக்கரணம் அடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. முதலில் சிறிய உயரமான பலகை மீது ஜம்ப் செய்யும் ரோபோ, சற்று உயரமான பலகை மீது லாவகமாக ஜம்ப் செய்கிறது. பின்னர் அப்படியே திரும்பி நிற்கும் அது, குட்டிக்கரணம் அடித்து ஸ்டெடியாக நிற்கிறது. பார்க்க மனிதர்கள் செய்வது போலவே உள்ளது. பலரும் இந்த ரோபோவின் செயல்பாடுகளைப் பார்த்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Very Agile Robot ? pic.twitter.com/XVDkDEwBSr
— Scott Hefti ? (@Havenlust) December 18, 2019