தொலைதொடர்புத் துறை நிலுவைத் தொகை – 15 ஆண்டுகளில் செலுத்த வோடபோன்-ஐடியா அவகாசம் கோரிக்கை

 

தொலைதொடர்புத் துறை நிலுவைத் தொகை – 15 ஆண்டுகளில் செலுத்த வோடபோன்-ஐடியா அவகாசம் கோரிக்கை

பிரபல வோடபோன்-ஐடியா நிறுவனம் மத்திய தொலைதொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு 15 ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளது.

டெல்லி: பிரபல வோடபோன்-ஐடியா நிறுவனம் மத்திய தொலைதொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு 15 ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளது.

மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளன. உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் இந்த நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. இந்த பாக்கித் தொகையை கடந்த 14-ஆம் தேதி நள்ளிரவுக்குள் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் நிலுவைத் தொகை பாக்கி ரூ.53,000 கோடி ஆகும். இந்த நிலையில், தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.23 ஆயிரம் கோடி மட்டுமே நிலுவைத் தொகை பாக்கியுள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் அதில் கூடுதலாக செலுத்திய வரி ரூ.8000 கோடியை கழித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ttn

மீதித் தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த அவகாசம் கேட்டு தொலைத்தொடர்புத் துறையிடம் வோடபோன் ஐடியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மொத்த வருவாயில் 8 சதவீதமாக உள்ள உரிமக் கட்டணத்தை 3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய தொலைதொடர்பு துறைக்கு வோடபோன்-ஐடியா வழங்க வேண்டிய நிலைவை தொகையில் ரூ.1000 கோடியை ஏர்டெல் நிறுவனம் அண்மையில் செலுத்தியது. முன்னதாக இந்த நிறுவனம் கடந்த 17-ஆம் தேதி மத்திய அரசின் தொலைதொடர்பு துறைக்கு ரூ.2,500 கோடி நிலுவைத் தொகை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.