கூகுள் ப்ளே ஸ்டோரின் ’சிறந்த ஆப்’- ’டிக் டோக்’!

கூகுள் ப்ளே ஸ்டோரின் ’சிறந்த ஆப்’- ’டிக் டோக்’!

2018ம் ஆண்டு முடியவுள்ள நிலையில், கூகுள் ப்ளே இந்த ஆண்டிற்கான சிறந்த ஆப்-பை அறிவித்துள்ளது. இந்தியாவின் ‘மிகவும் சுவாரஸ்யமான ஆப்’ என்ற பிரிவின் கீழ் ’டிக் டோக்’ ஆப்-பிற்கு கூகுள் ப்ளே விருது அறித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மியூசிக்கலி உடன் கூட்டணி வைத்து உலகளவில் பயணர்களை ஈர்த்தது டிக் டோக். இதன் மூலம், பயணர்கள் குறைந்த நொடிகளில் லிப்-சிங்குடன் கூடிய வீடியோவில், வித்தியாசமான முக பாவனைகளை காட்டி காமெடி, பாடல், நடனம் என நடித்து பதிவேற்றம் செய்யலாம். இந்த ஆப் பயணர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து, இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்துள்ளது.

tiktok

இந்தியா மட்டுமின்றி பிரேசில், ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்-காங், ஜப்பான், இந்தோனேஷியா, கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, தைவான், தாய்லாந்து, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், ’மிகவும் சுவாரஸ்யமான ஆப்’ என்ற பிரிவில் ‘டிக் டோக்’ ஆப் விருதுகளை பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் இந்த ஆண்டின் ‘சிறந்த ஆப்’ ஆகவும் ‘டிக் டோக்’ தேர்வாகியுள்ளது.

டிக் டோக் இப்போது 150 மார்க்கெட்களில் சுமார் 75 மொழிகளில் கிடைக்கிறது. உள்ளூர் கலச்சாரத்துடன் தொடர்புப்படுத்திக் கொண்டு, பயணர்கள் தங்களது மொழிகளில், தங்களுக்கு பிடித்த வீடியோக்களை தேர்வு செய்து நடிப்பதற்கு ஏற்ப இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளேவின் பயன்பாட்டாளர்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் இந்த விருதுகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.