ஒரே மாதத்தில் 85 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

 

ஒரே மாதத்தில் 85 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரே மாதத்தில் சேர்த்திருப்பதாக டிராய் மூலம் தெரிய வந்துள்ளது.

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரே மாதத்தில் சேர்த்திருப்பதாக டிராய் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் மிகச் சொற்பமாகி விட்டன. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. இதை டிராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கணிசமாக இழந்துள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ 85.6 லட்சம் வாடிக்கையாளர்களை கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் பெற்றுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் சுமார் 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ படிப்படியாக வலுவான வாடிக்கையாளர் கட்டமைப்பை பெற்று வருவது உறுதியாகி இருக்கிறது.