ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன்ஓ.எஸ் 10.3.1 அப்டேட்

 

ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன்ஓ.எஸ் 10.3.1 அப்டேட்

ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன்ஓ.எஸ் 10.3.1 அப்டேட் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன்ஓ.எஸ் 10.3.1 அப்டேட் அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன்ஓ.எஸ் 10.3.1 அப்டேட் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் கொடுக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு அம்சத்தில் கூடுதல் பலனை அளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விரல்ரேகை சென்சாரை பயன்படுத்தி போனை அன்லாக் செய்யும்போது திரையில் கருப்பு நிறம் தோன்றும் பிரச்சனை இருந்தது.

தற்போது கொடுக்கப்பட்டுள்ள அப்டேட் மூலம் அந்த பிரச்சனை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைஃபை கனெக்டிவிட்டியை உறுதியாக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேமராவில் அவ்வப்போது ஏற்படும் கோளாறு, ஹாட்ஸ்பாட் அடிக்கடி டிஸ்கனெக்ட் ஆவது போன்ற பிரச்சனைகளுக்கும் புதிய அப்டேட் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.