எம்.ஐ நிறுவனத்தின் புதிய 12.5 இன்ச் (2019) லேப்டாப் சீனாவில் அறிமுகம்!

 

எம்.ஐ நிறுவனத்தின் புதிய 12.5 இன்ச் (2019) லேப்டாப் சீனாவில் அறிமுகம்!

எம்.ஐ நிறுவனத்தின் புதிய 12.5 இன்ச் (2019) லேப்டாப் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: எம்.ஐ நிறுவனத்தின் புதிய 12.5 இன்ச் (2019) லேப்டாப் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஐ நிறுவனத்தின் புதிய 12.5 இன்ச் (2019) லேப்டாப் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆப்பிள் மேக்புக் ஏர் மாடலுக்கு போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது. இதில் 8-வது தலைமுறை இன்டல் கோர் ஐ5 பிராசஸர், 4 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஃபுல் ஹெச.டி டிஸ்பிளே ஆகிய முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளது. மார்ச் 28-ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் இந்த மாடல் கோல்டு மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இன்டெல் கோர் எம்3 சிபியு மாடல் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.38,400 என்றும், அதே பிராசசர் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை தோராயமாக ரூ.42,700 என்றும், இன்டெல்கோர் ஐ5 மாடல் விலை ரூ.45,900 என்றும் நிரனயிக்கப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் லோகோ டிசைன் இல்லாமல் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பின் எடையை பொறுத்தவரை சுமார் 1.07 கிலோ மட்டுமே கொண்டுள்ளது. இந்த நோட்புக்கை 50 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்துவிடலாம். மேலும் டிடீஎஸ் சவுண்ட் சப்போர்ட் கூடிய வசதியை இந்த மடிக்கணினியில் சியோமி நிறுவனம் பொருத்தியுள்ளது. மற்ற அம்சங்களை பார்க்கையில் 4 ஜிபி ரேம், யுஎஸ்பி -டைப் சி போர்ட், ஹெச்டிஎம்ஐ போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் புல்-லிட் விசைப்பலகையை கொண்டுள்ளது.மேலும் எம்ஐ நோட்புக் ஏர் வின்டோஸ் 10 ஹோம் எடிஷன் தயாரிப்பை பெற்றுள்ளது.