இன்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

இன்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A8s மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக இன்ஃபினிட்டி-ஓ ரக டிஸ்பிளே கொண்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 6.7 எம்.எம் அளவில் சிறிய துளையிடப்பட்டு அதில் கேமரா இருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A8s சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்

அட்ரினோ 616 GPU

– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்

– 128 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் சிம்

– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7

– 10 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4

– 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2

– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

கைரேகை சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் புளு, கிரே மற்றும் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் இதன் விலை பற்றிய தகவல்கள் ஏதும் வெளிடப்படவில்லை.