"தொட வேண்டாம்; விரல்களை அசைத்தாலே போதும்" - தொழில்நுட்பத்தில் அசத்திய ஆப்பிள்

 
tn

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 , ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 வாட்ச்சின்  திரையை தொடாமலேயே விரல்களை  அசைத்தால் வாட்ச்சில்  உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு வாட்ச்சை  உபயோகிக்க கூடிய செயல்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

tn

ஆள்காட்டி விரலையும்,  கட்டை விரலையும் இரண்டு முறை சுண்டினாலே அழைப்புகளை ஏற்கவும் மீண்டும் அழைப்புகளை கட் செய்யவும் முடியும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிமுகம் செய்துள்ளது.  அப்டேட்ஸ் ,வாட்சில் சேதம் ஏற்பட்டால் அலர்ட் செய்யும் வசதி ஆகியவையும்  இதில் இடம் பெற்றுள்ளது . அதேபோல் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2ம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஆப்பிள் வாட்ச் சீரிஸின் ஆரம்ப விலை 41 ஆயிரத்து 900 எனவும், அல்ட்ரா 2 மாடலின் விலை 89 ஆயிரத்து 900 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை நீங்கள் வருகிற 15ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் , 22 ஆம் தேதி முதல் கடைகளில் கிடைக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.