வாட்ஸ் ஆப்பில் விரைவில் வருகிறது Username வசதி!

 
whatsapp

வாட்ஸ் ஆப்பில் Username வசதியை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.  இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா  19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது

இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வாட்ஸ்அப் யூசர்நேம்  மற்றும் ரிடிசைன்டு செட்டிங்ஸ் இண்டர்ஃபேஸ் உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கிறது. ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 வெர்ஷனில் உள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட்களில் யூசர்நேம் வைத்துக் கொள்ள செய்கிறது. இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ப்ரோஃபைல் ஆப்ஷன்களில் இயக்க முடியும்.  இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் காண்டாக்ட்களை அறிந்து கொள்வதற்கு மாற்றாக யூசர்நேம் மூலம் அறிந்து கொள்ள செய்கிறது.