கம்மியான விலையில் Tenco Pop 6 Pro ஸ்மார்ட்போன்

 
tecno pop 6 pro

டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. 

டெக்னோ சீனாவின் சேன்சேனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெக்னோ பாப் 6 ப்ரோ மாடலை அந்த நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மாட்போன் இந்திய சந்தையில் மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 8,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் வெளியாகவுள்ளது. அதாவது பீஸ்புல் புளு மற்றும் போலார் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் வெளியாகவுள்ளது. 

tecno pop 6 pro

6.6 இஞ்ச் ஹெச்.டி.பிளஸ் தொடுதிரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 12 தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்பகத்தில் 8 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜி, ஜிபிஎஸ், வைஃபை, புளுடூத், எஃப்.எம், ஒடிஜி சப்போர்ட், பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.