அசத்தலான அம்சங்கள்! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A54 மற்றும் A34 - இன்று முதல் முன்பதிவு

 
Samsung a54

சாம்சங் கேலக்ஸி A54 மற்றும் கேலக்ஸி A34 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாம்சங், தென் கொரியாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்தியாவில் சாம்சங் செல்போன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதேபோல் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக சந்தையை கொண்டுள்ளது. அவ்வபோது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தி வரும் சாம்சங் நிறுவனம் தற்போது ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது,
சாம்சங் கேலக்ஸி A54 மற்றும் கேலக்ஸி A34 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. சாம்சங் கேலக்ஸி A34 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ. 30 ஆயிரத்து 999 ரூபாய்யாகவும், 8ஜிபி+256ஜிபி வேரியண்டின் விலை 32 ஆயிரத்து 999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கேலக்லி A54 8ஜிபி+128ஜிபி விலை  38 ஆயிரத்து 999 ரூபாயாகவும், 8ஜிபி+256ஜிபி விலை  40 ஆயிரத்து 999 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் சாம்சங் ஸ்டோர் மற்றும் பார்ட்னர் ஸ்டோர், சாம்சங் வலைத்தளம், இதர ஆன்லைன் தளங்களில் மார்ச் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 

Samsung a54

சாம்சங் கேலக்ஸி A54 மற்றும் A34 சிறப்பம்சங்கள் :

இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. கேலக்ஸி A54 மாடலில் முற்றிலும் புதிய எக்சைனோஸ் 1380 பிராசஸரும், கேலக்ஸி A34 மாடலில் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி A54 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP மேக்ரோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி A34 மாடலில் 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் OIS, வீடியோ டிஜிட்டல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் போன்ற அம்சங்கள் உள்ளன.  இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ 5.1 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் நான்கு ஒஎஸ் அப்கிரேடுகள், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை இரு மாடல்களும் பெற இருக்கின்றன. வாய்ஸ் ஃபோக்கஸ், நாக்ஸ் செக்யுரிட்டி, பிரைவசி டேஷ்போர்டு, பிரைவேட் ஷேர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. சாம்சங் கேலக்ஸி A54 ஸ்மார்ட்போன் ஆசம் லைம், ஆசம் கிராஃபைட் மற்றும் ஆசம் வைலட் போன்ற நிறங்களிலும், கேலக்ஸி A34 ஸ்மார்ட்போன் ஆசம் லைன், ஆசம் கிராஃபைட் மற்றும் ஆசம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.