அசத்தலான அம்சங்களுடன் ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

 
Realme 11

வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Realme சீனாவை சேர்ந்த எலக்டரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் குறைந்த விலையில் செல்போன்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதுவரை ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள இந்நிறுவனம் விரைவில் ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்டோன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல்மி 11, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. 
ரியல்மி 11 ப்ரோ மாடலின் விலை இந்திய மதிப்பில் 21 ஆயிரத்து 310 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 2  இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 875 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

Realme 11

Realme 11 சீரிஸ் சிறப்பம்சங்கள்: 

ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்களில் டிமென்சிட்டி 7050 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் COP அல்ட்ரா தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.  ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா உள்ளது.  ரியல்மி 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ பிளஸ் மாடல்களில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இத்துடன் முறையே 67 வாட் மற்றும் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் யுஎஸ்பி டைப் சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.